×

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்று ரமலான் கொண்டாட்டம்: ஜாக் கமிட்டி சார்பில் மசூதிகளில் சிறப்பு தொழுகை

குமரி: தமிழ்நாடு முழுக்க நாளைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜாக் கமிட்டியை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். சவூதி அரேபிய உட்பட பல்வேறு வளைகுடா நாடுகளில் பிறை தென்படுவதை கணக்கில் கொண்டு ரமலான் பெரு விழாவை ஜாக் கமிட்டியினர் இன்று கொண்டாடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இளங்கக்கடையில் உள்ள பள்ளி வாசல் முன்பு கூடிய இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். இதேபோல் தேங்காய் பட்டினம், திருவுதங்கோடு, குளச்சல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மசூதிகளில் ரமலான் நோம்பு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் ஜாக் கமிட்டி சார்பில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. மசூதியில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாதாரணமாக நடைபெற்ற தொழுகை இந்த ஆண்டு கூட்டுத் தொழுகையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதேபோல் தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜாக் கமிட்டியினர் சார்பில் இன்று ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை விமர்சியாக நடைபெற்றது.

The post தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இன்று ரமலான் கொண்டாட்டம்: ஜாக் கமிட்டி சார்பில் மசூதிகளில் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Ramadan ,Tamil Nadu ,Jack Committee ,Kumari ,Muslims ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து